விண்வெளி வீரர்களின் சாப்பாட்டுக்கு ஐடியா கொடுத்தா ரூ.7.4 கோடி பரிசு! நாசாவின் அசத்தல் அறிவிப்பு;
- Get link
- X
- Other Apps
விண்வெளிக்கு செல்லும் வீரர்களுகு தரமான உணவுகள் வழங்குவதற்கு ஐடியா கொடுப்பவர்களுக்கு ரூ. 7.4 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.
விண்வெளிக்கு செல்லும் நபர்கள் அங்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். விண்வெளியில் பயன்படுத்தக் கூடிய உடைகள், பொருட்கள், உணவுகள் என அனைத்திலுமே அதிக கட்டுப்பாடுகள் உள்ளது.
மேலும், விண்வெளிக்கு செல்லுபவர்களுக்கு என பிரத்யேகமான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைந்த உணவு வகைகளை மட்டும் தான் அங்கே சாப்பிட முடியும்.
இந்த நிலையில், இந்த உணவுகளை மாற்றி அமைக்கும் வகையில், புதுமையான உணவு வகைகளை கண்டுப்பிடித்து வருவோருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7.4 கோடி) வழங்கப்படும் என நாசா அறிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பிற்காக “Deep Space Food Challenge” என்ற பெயரில், இதனை அறிமுகம் செய்துள்ள நாசா, எப்படிப்பட்ட உணவு வகைகளாக அவை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதில், சத்தான, புதுமையான அதே வேளையில் நீண்ட நாள் கெடாத உணவு வகைகளை வழங்க வேண்டும். இதற்கான சிறந்த தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இந்த பணம் வழங்கப்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாசா உணவு துறையின் தலைமை அதிகை ஜிம் ராய்ட்டர் தெரிவிக்கையில், நீண்ட காலம் கெடாமல் இருப்பதில் தான் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
இதை எல்லாம் தாண்டி, உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை, விண்வெளி வீரர்கள் சாப்பிடும் வகையில், சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.
தற்போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விண்வெளி வீரர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதும், அதில் அனைத்து வகையிலான சத்துக்களும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment