நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி கின்னஸ் சாதனை.......

 ஈரானின் AKraj என்ற பகுதியை சேர்ந்த Abolfazl Saber Mokhtari என்பவர், உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

துகுறித்து Mokhtari(50) கூறுகையில், சிறுவயது முதலே தனது உடலில் ஸ்பூன்களை சமநிலை செய்து வந்தேன். அதன் தொடர் பயிற்சியின் விளைவாக இன்று இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளேன்.

மேலும் தனது உடம்பில் எந்த ஒரு பொருளையும் சமநிலை செய்யும் சக்தி இருப்பதாகவும், பிளாஸ்டிக், கிளாஸ்,ஸ்டோன், வுட் போன்ற எதுவாக இருந்தாலும் சமநிலை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

தனது உடலின் ஆற்றலை தன் மேல் உள்ள பொருள்களின் மீது தான் திசை திரும்புகிறேன். அதனால் அந்த பொருள்களை என்னால் தொடவும் உணரவும் முடிகிறது. இதுவே நான் இன்று இந்த கின்னஸ் சாதனை படைக்க முதற்காரணம் என தெரிவித்துள்ளார்.

Mokhtari(50) இந்த சாதனையை செய்வதற்கு முன்பு ஸ்பெயின் சேர்ந்த Marcos Ruiz Ceballos என்பவர் தனது உடலில் 64 ஸ்பூன்களை சமநிலை செய்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 







Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்