பூமி எப்போது அழியும்? புதிரை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..!
- Get link
- X
- Other Apps
பூமி எப்போது அழியும் என்பதற்கான விடையை விஞ்ஞானிகள் ஏறத்தாழ கண்டுபிடித்துவிட்டனர்.
- பூமியின் அழிவு எப்போது? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- சூரியனில் ஏற்படும் வெடிப்பால் பூமி அழியும்
- புதன், வெள்ளி கிரகங்களும் அழிந்துவிடுமாம்.
பூமி மற்றும் பால்வெளி அண்டத்தை உருவாக்கம் குறித்த ஆய்வில் கடந்த இருநூறு, மூன்னூறு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் புதுப்புது தியரிகள் பரப்பரப்பாக பேசப்படும். அந்த வகையில் பூமியின் அழிவு எப்போது? என்பது குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கேள்விக்கான பதில் ஏறக்குறைய கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இதற்கு முன்பு கூறப்பட்ட பல ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில், புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட உண்மையான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் லேட்டஸ்ட் கூற்றின்படி, சூரியனால் பூமி அழியும் எனத் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் வெடிப்பு
தி மிரர் (The Mirror) பத்திரிகையின் அறிக்கையின்படி, சூரியனால் உலகம் அழியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்குள் பிரபஞ்சம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும் எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், சூரியன் வெடிப்பு நிகழும் சமயத்தில் பூமியில் நாம் யாரும் உயிருடன் இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இந்த வெடிப்பானது சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அப்போது, சூரியனைச் சுற்றியிருக்கும் அனைத்து கிரங்களும் அழிந்துவிடுமாம்.
ஹைட்ரஜன் கோர்
ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது பெருவெடிப்புக்குப் பிறகு சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் கோர் வேலை செய்வதை நிறுத்திவிடும். பின்னர் சூரியனால் வெப்பத்தை உருவாக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற கிரகங்களும் குளிர்ச்சியாக மாறும். சூரியனை அழிக்கும் கோள்களில் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களும் அடங்கும் என்றும், ஆனால் பூமியில் வரப்போகும் அழிவைப்போல் வேறு எந்த கிரகத்திலும் அத்தகைய அழிவு இருக்காது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ALSO READ : கின்னஸ் சாதனை படைத்து 465 நாள் இருந்த குமிழி! விஞ்ஞானக் குமிழி..........
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment