நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google Search: கூகுளில் பெண்களின் 'TOP' தேடல்கள்..!!

 இன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.  இளையத்தில் ஏதேனும் ஒன்றை ‘தேடிக்’ கொண்டே இருக்கிறார்கள்.


  • இன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.
  • 2 கோடி பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர்.
  • பெண்கள் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்கள்.


ன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.  இளையத்தில் ஏதேனும் ஒன்றை ‘தேடிக்’ கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையான தகவல் வேண்டும் என்றாலும், நம்மை ஏமாற்றாமல் உடனடியாக கூகுள் நமக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது. அந்த வகையில், ஆண்களை விட பெண்களே அதிக நேரம் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யம் அளிக்கிறது அல்லாவா.. 

பெண்கள் அப்படி என்ன தான் கூகுளில் தேடுகிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை பொறுத்தவரை இதயத்தில் காதல் உணர்வு இருந்தால், பெண்கள் கூகுளைப் பயன்படுத்தி காதல் கவிதைகளைப் படிக்கவும் அல்லது அதைத் தங்கள் துணைக்கு அனுப்பவும் செய்கிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தவிர உடல் பருமன் குறைப்பது குறித்த டிப்ஸை தேடுகிறார்கள். அதே போன்று, வேலை தொடர்பான தகவல்களை கூகுளில் பெண்கள் தேடுகின்றனர் என்கிறது ஆய்வு

2 கோடி பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர்

நாட்டில் உள்ள மொத்த 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 20 மில்லியன் பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் 75 சதவீத பெண்கள் 15-34 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், 31 சதவீத டீனேஜர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்ன வழி என்பதைப் பற்றி இணையத்தில் தேடுகிறார்கள். இது தவிர, 17 சதவீதம் பேர் செக்ஸ், மனச்சோர்வு மருந்துகள் போன்றவற்றைப் பற்றி அதிகம் தேடுகிறார்கள். பெண்கள் இணையத்தில் எதைத் தேடுகிறார்கள் என்பதை அறிவது சுவாரஸ்யமானது.

பெண்கள் கூகுளில் அதிகம்  தேடும் விஷயங்கள்

- சிறுவயதில் இருந்தே தொழிலில் லட்சியமாக இருக்கும்  பெண்கள், இது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுகிறார்கள். அவர்கள் எந்த வகை தொழிலை செய்யலாம் அல்லது எந்த விதமான படிப்பு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் என தேடுகிறார்கள். 

- அதுமட்டுமல்லாமல், தங்கள் அழகுக்காக புதுப்புது டிப்ஸ்களைக் கடைப்பிடிக்க கூகுள் உதவியை நாடுகிறார்கள். பல பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள இணையத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளைப் படிக்கிறார்கள்.

- பல பெண்களும் தங்கள் உடல்  பருமனை குறைக்க டிப்ஸ்களை தேடுகிறார்கள். அதற்கான உணவு பழக்கங்கள், பயிற்சி குறித்த தகவல்களை அதிகம் தேடுகிறார்கள்

- பல பெண்களும் கூந்தல் விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டுவதை பார்த்திருக்கலாம். தனது தலைமுடியை எவ்வாறு வெட்டிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று இணையத்தில் தேடுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ALSO READ : எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்