நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் உறுப்புகள் சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்........

 மனித உடல் பல ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது. அவற்றுள் வியப்பூட்டும் சில உண்மைகள் உங்கள் பார்வைக்கு...


* கருவிழியில் உள்ள மெலனின் கண் நிறத்தை தீர்மானிக்கிறது.

* கண்ணில் ஒளி உணர்திறன் கொண்ட 107 மில்லியன் செல்கள் உள்ளன.

* கண்கள் ஒவ்வொரு நொடியும் 50 வெவ்வேறு பொருள்களில் கவனம் செலுத்தும் ஆற்றல் கொண்டது.

* உடலில் கண்ணை விட சிக்கலான ஒரே உறுப்பு மூளை.

* கண்கள் தோராயமாக 10 மில்லியன் வண்ணங்களை வேறுபடுத்தி அறியும் தன்மை கொண்டது.

* கண்களைத் திறந்து கொண்டு தும்முவது இயலாது.

* கண்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே அளவில்தான் இருக்கும்.

* மனிதனின் கண்கள் வருடத்திற்கு சராசரியாக 42,00,000 முறைகள் இமைக்கின்றன.

* மனித இதயத்தின் சராசரி எடை 220-260 கிராம்.

* சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 23 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றுதல் என சுவாசம் மேற்கொள்கிறான்.

* வாழ்நாளில் கண்கள் சிமிட்டும் எல்லா நேரங்களையும் சேமித்து, அவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், 1.2 வருடங்கள் இருட்டான சூழலை உணரலாம்.

* ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை தனித்துவமாக இருப்பது போலவே நாக்கிலும் ரேகை உள்ளது.

* எந்த மனிதருக்கும் ஒரே மாதிரியான பற்கள் இருக்காது.

* ஒவ்வொரு மாதமும் புதிய தோல் உருவாகும்.

* என்சைக்ளோபீடியாவை விட 5 மடங்கு அதிகமான தகவல்களை மனித மூளை சேமித்து வைத்திருக்கும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!