நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகு க்ரீம்ல இந்த வைட்டமின் இருக்கான்னு பாருங்க, இது சருமத்தை அற்புதமா பாதுகாக்குமாம்!

 க்யூட் சருமம் என்பது பராமரிப்புடன் முடிந்துவிடுவதில்லை. சரியான வைட்டமின்களும் அவசியம். சருமத்துக்கு வைட்டமின் பி3 அளிக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.


  • சருமத்தில் புதிய செல்கள் உருவாக்க உதவுவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம்
  • சருமத்தில் அதிக நேரம் உறிஞ்சக்கூடிய சீரம் மற்றும் மாய்சுரைசர்கள் சிறந்தவை.


வைட்டமின் பி3  நீரில் கரையக்கூடிய நியாசினமைடு ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் இது தோல் பராமரிப்பு மூலப்பொருளாக அறியப்படுகிறது. உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது நரம்பு மண்டலம் முதல் செரிமான அமைப்பு வரை அனைத்துக்கும் உதவும்.

வைட்டமின் பி3 உள்ள உணவுகள்

இறைச்சி,
முட்டை,
பால்
மீன்
பச்சை காய்கறிகள்


போன்றவற்றில் இவை அதிகமாகவே உள்ளது. உங்கள் அன்றாட உணவில் அடிக்கடி இவை சேர வேண்டும். வைட்டமின் பி3 சருமத்துக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

நீரேற்றம் அளிக்கிறது

சருமத்தின் மேற்பரப்பில் இருந்து ஈரப்பதம் இழப்பதை தடுக்க இந்த வைட்டமின் உதவுகிறது நமது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு நீரிழிப்பு மோசமான பாதிப்பை உண்டாக்கும். அதை தடுத்து நீரேற்றம் அளிக்க இவை உதவுகிறது.


வயதான எதிர்ப்பு

இது சருமத்தை இளமையாக வைத்திருக்கும் பண்புகளை கொண்டுள்ளது. பல வயதான எதிர்ப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் புதிய செல்கள் உருவாக்க உதவுவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் இதை செய்வதாக சொல்லப்படுகிறது.

சருமத்தை பிரகாசமாக்குகிறது

இது மெலனின் உற்பத்தி செய்யும் பாதைகளில் செயல்படுவதன் மூலம் நிறமி மற்றும் சருமத்தை பிரகாசமாக்க வைக்கிறது.

சரும உணர்திறன்

சரும உணர்திறன் வாய்ந்தவற்றுக்கு முகப்பரு மற்றும் ரோசாசியா போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு அழற்சி எதிர்ப்பு கூறு சிறந்ததாக இருக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது

முகப்பருவுடன் சியாசினமைடு எதிர்த்து போராடுகிறது. சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் முகப்பரு மற்றும் விரிவாக்கப்பட்ட சருமத்துளைகளை குறைக்க செய்கிறது.

சருமத்தை எல்லாகாலங்களிலும் பாதுகாக்கிறது

சருமத்தில் மேம்படுத்தப்பட்ட எபிடெர்மல் லிப்பிட் ஆனது, வெளிப்புற சூழலில் இருந்து (அதாவது நீர், வெப்பம், காற்று, வியர்வை, சூரியன்) தன்னை பாதுகாத்து கொள்ளும் தோலின் இயற்கையான எபிடெர்மல் திறன் பெரிதும் மேம்படுகிறது. காலப்போக்கில் மற்றும் நியாசினமைடு கலவையின் தினசரி பயன்பாட்டினால் சிவத்தல், சரும கருமை மற்றும் உணர்திறன் ஆகியவற்றை குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது.

சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது

சூரியனிடமிருந்து புற ஊதாக்கதிர்களினால் உண்டாகும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. நியாசினமைடு சூரியனின் வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. யுவி வெளிப்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளானது ஃப்ரீ ரேடிக்கல்களை செயல்படுத்துகிறது. மேலும் நிறமியின் உற்பத்தியை தூண்டுகிறது. நிறமி ஹார்மோன் என்றால் வெப்பம் பிரச்சனை .ஆனால் நியாசினமைடு சருமத்தை வெப்பம் மற்றும் அதன் அனைத்து தேவையற்ற பக்கவிளைவுகளிலிருந்தும் காக்கிறது. அதனால் தான் சருமத்துக்கு வைட்டமின் பி3 சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

தோல் நிறத்தை மீட்கிறது

மெலனோசைட்டுகளிலிருந்து உங்கள் மேல் தோலின் சுற்றியுள்ள தோலுக்கு நிறமி பரிமாற்றம் அதாவது சன் டான் என்று அழைக்கப்படுகிறது. எனினும் காலப்போக்கில் இந்த தோல் பதனிடுதல் செயல்பாடு செயலிழக்கும். அப்போது மங்கலான நிறமிகளுடன் முடிவடையும். இது ஹைப்பர் பிக்மெண்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. நியாசினமைடு நிறமி உற்பத்தியை குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மெண்டேஷனுக்கு உதவும்.

எந்த சருமத்துக்கு சிறந்தது

நியாசினமைடு தனித்துவமான குணங்கள் அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் காரணமாக எல்லாவித சருமத்துக்கும் பொருத்தமானது. குறிப்பாக உணர்திறன் சருமம் கொண்டவர்களுக்கும் இது பொருத்தமானது. உடலில் உள்ள பல செயலில் உள்ள தோல் பராமரிப்பு பொருள்களுடன் இது பயன்படுத்தப்படலாம். இதில் ஆல்ஃபா ஹைலுரோனிக் அமிலம் மற்றும் பீட்டா ஹைலுரோனிக் அமிலம் மற்றும் ரெட்டினோல் ஆகியவற்றுடன் இணக்கமானது.


மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு காரணமாக மற்ற செயலில் உள்ள பொருள்கள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் அதை குறைக்க செய்யும். உங்கள் சருமத்தில் முதலில் இதை பயன்படுத்திய பிறகு பரிசோதிப்பது நன்மை பயக்ககூடியது.

தினசரி வைட்டமின் பி3 பயன்படுத்தலாமா?

சில சீரம்களை போலல்லாமல் வைட்டமின் பி3 நிரம்பிய ஒன்றை தினசரி காலையிலும் இரவிலும் பயன்படுத்தலாம். மாய்சுரைசர்கள் முதல் சீரம்கள் வரை எண்ணெய்கள் ஒவ்வொரு வடிவிலும் கிடைக்கும். உங்கள் சருமத்துக்கேற்ற தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக சருமத்தில் அதிக நேரம் உறிஞ்சக்கூடிய சீரம் மற்றும் மாய்சுரைசர்கள் சிறந்தவை என்று கூறுகிறார்கள்.


இனி உங்கள் அழகு தயாரிப்பு அனைத்திலும் வைட்டமின் பி3 உள்ளதா என்பதை பாருங்களேன்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்