நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்

 சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் வீடியோவில் காணப்பட்டது.


அஸ்ஸாமில் மூன்று வயது சிறுமி யானையிடம் பால் குடிக்க முயலும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மனதைக் கவரும் காட்சியாக அமைந்துள்ளது. அந்த 3 வயது சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் அந்த வீடியோவில் காணப்பட்டது. அதேபோல யானையும் தன் தும்பிக்கையை அந்த சிறுமியிடம் அசைத்து விளையாடுவதை காணலாம். 

இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் (Assam Video) கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் (Social Media) பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது.

அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

 

 

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ALSO READ : ஜோடி சேர்ந்து லூட்டியடிக்கும் வாத்து... புதுமையான ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்! சினிமாவையும் மிஞ்சிய காட்சி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்