’ரூ.3,200 கோடி பரிசு’ மெகா மில்லியனரை தேடும் லாட்டரி நிறுவனம்..!
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவில் 3,200 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரை லாட்டரி நிறுவனம் தேடிக் கொண்டிருக்கிறது.
- ஒரே லாட்டரியில் 3,200 கோடி ரூபாய் பரிசு
- அமெரிக்காவில் விழுந்த பம்பர் ஜாக்பாட்
- அதிர்ஷ்டசாலி யார்? என தெரியவில்லை.
’ஓவர் நைட்டில் ஓபாமா ஆகலாம் என்று பாக்குற’ என ஒருவரை கலாய்ப்பதற்காக பொதுவாக பலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த மாதிரியான வேடிக்கையான சொல்லாடல்கள் ஒரு சில எதிர்பாராத சமயங்களில் உண்மையாகவும் ஆகிவிடுவது தான் இந்த உலகில் வேடிக்கையான விஷயம். அப்படியான வேடிக்கையான சம்பவங்கள் அதிகமாக எதில் நடைபெறும்? என்றால் லாட்டரி. கூலித்தொழிலாளியாக இருப்பார், ஏதோ ஒருநாளில் 10 ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரே இரவில் லட்சாதிபதியாகிவிடுவார்.
கனவு மாதிரி தோன்றினாலும், உலகின் ஏதோ ஒரு மூலைகளில் இப்படியான சம்பவங்கள் தினம்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரே ஒரு லாட்டரியில் ஒருவருக்கு 3,200 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது, கேட்கும்போதே பலருக்கும் தலைச் சுற்றலாம். ஆனால் இது உண்மை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் கேஸ் நிலையத்தில் அந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், லாட்டரி விழுந்த நபர் யார்? என்று தெரியவில்லை. அவரை லாட்டரி நிறுவனம் தேடிக் கொண்டிருக்கிறது. லாட்டரி விழுந்த நபர், இந்த தொகையை ஒரே தவணையாகவும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது 29 ஆண்டுகள் தவணை முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என கலிஃபோர்னியா மாநில லாட்டரி நிர்வாகம் கூறியுள்ளது.
கலிஃபோர்னியா லாட்டரி இயக்குநர் ஜான்சன் இது குறித்து பேசும்போது, ஏதாவதொரு சமயங்களில் இப்படியான அதிர்ஷ்டம் ஒருவருக்கு அடிக்கும். இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார்? எனத் தெரியவில்லை. அவர் விருப்பப்படி ஓராண்டுக்குள் அல்லது தவணை முறையில் 29 ஆண்டுகளுக்கும் பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவே அந்த நபர் யார்? என உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
also read : Google Search: கூகுளில் பெண்களின் 'TOP' தேடல்கள்..!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment