நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடம்பில் ரத்தத்தின் அளவை கிடு கிடுவென அதிகரிக்கும் ஆம்லேட்: எவ்வாறு தயார் செய்வது?

 முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது 2 முறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து வேறில்லை.



தேவையான பொருட்கள்

  • முருங்கைக் கீரை - ஒரு கப்
  • முட்டை - 3
  • வெங்காயம் - ஒன்று
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:


  • தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - சிறிது
  • சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
  • தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
  • வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுத்து சாப்பிட முருங்கைக் கீரை ஆம்லெட் தயார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!