நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புத்துணர்ச்சி தரும் மசாலா மோர்… சிம்பிள் ஸ்டெப்ஸ் இதுதான்!

 மோர் அனைத்து காலங்களிலும் பருக ஏற்ற பானமாக உள்ளது. ஆனால், இவற்றை கோடையில் பருகுவது மிகவும் நன்மை பயக்கும்.


கோடை காலத்திற்குள் நுழையும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இனி வரும் மாதங்களில் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மை பாத்துக்க முறையான திட்டங்களை நாம் இப்போதே தொடங்க வேண்டும்.

அந்த வகையில், கொளுத்தும் வெயிலை தாங்கும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானங்களில் மோருக்கு எப்போதும் தனி இடம் உண்டு. தயிரில் இருந்து பெறப்படும் மோர் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு பானமானாக உள்ளது. அவற்றில் சுவையான ‘மசாலா மோர்’ தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.


மசாலா மோர் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

தாளிக்க…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்

அரைக்க…

பச்சை மிளகாய் – 1/2
கறிவேப்பிலை – 3 இலை
இஞ்சி – 1/4 இன்ச்

மசாலா மோர் சிம்பிள் செய்முறை:

முதலில் ஒரு கப் தயிரை எடுத்து அதனை பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். பிறகு அவற்றை மத்தை அல்லது மிக்ஸ் செய்துவதை கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

இதன்பின்னர், மிக்சி எடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் முன்பு மிக்சியில் அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்துக்கொள்ளவும்.


தொறந்து மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பாத்த மசாலா மோர் தயார். அவற்றை ஒரு டம்ளரில் ஊற்றி பருகி மகிழலாம்.



ALSO READ : உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூ.. எப்படி பயன்படுத்துவது என்பது இங்கே!

Comments

Popular posts from this blog