நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்கும் சத்தான கொள்ளு சாதம் செய்ய ரெசிபி...

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. 

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

சீரகச் சம்பா அரிசி அல்லது வேறு ஏதானும் ஒரு அரிசி -1 கப்,

பெரிய வெங்காயம் -1,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - 2,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - 1 தேக்கரண்டி,

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,

உப்பு - தேவைக்கேற்ப,

நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

முதலில் கொள்ளுவை வேக விடவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீரகச்சம்பா அல்லது வேறு அரிசியை உதிரியாக வேக விடவும், பின் ஆற வைக்கவும். வாணலியில் நெய் 1 தேக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள்,  மல்லித்தூள்,  சீரகத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெந்த கொள்ளுவை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் ஆறிய சாதம் சேர்த்து கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். இப்போது கொள்ளு சாதம் ரெடி..




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!