தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய டிக் டாக் வீடியோவில் கேலி, நகைச்சுவை மற்றும் கலை உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி வேறெதும் இருக்க வாய்ப்பில்லை..
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய டிக் டாக் வீடியோவில் கேலி, நகைச்சுவை மற்றும் கலை உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி வேறெதும் இருக்க வாய்ப்பில்லை என்று தான் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட நபர் ஒருவர், அதன் மூலமாக மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த கதை வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கிரிஸ்வோல்டு. 25 வயதான இவர், டிக் டாக்கில் ரெகுலராக வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தனது திருமண வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் குறித்து அவ்வபோது டிக் டாக் வீடியோவில் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
அலெக்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அவரது முதுகுப் பகுதியில் கட்டி ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவர் அந்தக் கட்டி, தோல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அலெக்ஸை தொடர்பு கொண்டு அந்த ரசிகர்கள் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக தோல் நோய் சிகிச்சை நிபுணரை பார்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், அலெக்ஸ் இதை பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை. இதை ஒரு சாதாரண பிரச்சினையாக கருதி, தன் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார். ஒரு இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. ஆனால், அதற்கடுத்து, கட்டி பெரியதாக வளரத் தொடங்குவதையும், தனது ரசிகர்கள் சொன்ன அறிகுறிகள் தென்படுவதையும் அலெக்ஸ் உணர்ந்தார்.
இதையடுத்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றார் அலெக்ஸ். மருத்துவர்கள் அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். கட்டியினை அகற்றியிருக்காவிட்டால், அது மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சிகிச்சையின்போது மற்றொரு கட்டி வளர்வதும் கண்டறியப்பட்டு, அதுவும் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டது.
இதுகுறித்து அலெக்ஸ் கூறுகையில், “எனக்கு டிக் டாக்கில் 10 லட்சத்திற்கும் குறைவான அளவில் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதில், பெரும்பாலும் யாரும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியதில்லை. ஆனால், ரசிகர்களில் இரண்டு பேர் தொடர்ச்சியாக என்னை எச்சரித்து வந்தனர். நான் அதைப் பற்றி கவலைப் படாமல் எனது வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டேன். நல்ல வேளையாக, அதற்குப் பிறகு சிகிச்சை எடுத்து குணமாகிவிட்டது.
ஒருவேளை கட்டி அகற்றப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’’ என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சரும பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை அலெக்ஸ் வெளியிட்டு வருகிறார்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment