நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செட்டிநாடு சிக்கன் குர்மா....



 தேவையானவை


கோழிக்கறி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியா தூள் - 3 தேக்கரண்டி,
சீரகத்தூள் - 1தேக்கரண்டி,
சோம்புதூள் - 1 தேக்கரண்டி,
தேங்காய் - 1 மூடி,
கசகசா - 2 தேக்கரண்டி,
முந்திரி - 10,
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 ஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 3,
அன்னாசிப்பூ - 2,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5.


செய்முறை

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும். தேங்காய், முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளக்கயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும். கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வேக விடவும். கோழிக்கறி முழுவதும் வெந்த பின் இறக்கவும்.


ALSO READ : 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோவின் புதிய திட்டம்… எப்படி செயல்படும்?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!