நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலத்தால் அழியாத காவிய காதல் - நூற்றாண்டை கடந்தும் நிலைத்து நிற்கும் கடிதம்!

அமெரிக்க கார்டூனிஸ்ட் கலைஞர் ஆல்பிரட் ஜோசஃப் ப்ருஹ் சார்பில் அவரது மனைவி குய்லிடே ஃபேன்குய்லேவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
காதலுக்கு கண்ணில்லை, காதலுக்கு அழிவில்லை’’ என்ற வசனங்களை நாம் கேள்விபட்டிருப்போம். இதில் காதலுக்கு கண்ணில்லை என்ற வசனத்துக்கு ஏற்ப சில, பல காதல் கதைகளை நாம் பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். ஆனால், காதலுக்கு அழிவில்லை என்ற வசனத்திற்கு ஏற்ற நிகழ்வுகள் வரலாற்றில் ஒன்றிரண்டு தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால், மனிதனின் இறப்புடன் சேர்ந்த, அவரது காதல் சுவடுகளும் மறைந்து விடுகின்றன. ஆனால், நூற்றாண்டுகளை கடந்தும் நிலை நிற்கும் காவியக் காதல் குறித்த செய்தி இது.

இந்தக் கடிதம் கடந்த 1913ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்க கார்டூனிஸ்ட் கலைஞர் ஆல்பிரட் ஜோசஃப் ப்ருஹ் சார்பில் அவரது மனைவி குய்லிடே ஃபேன்குய்லேவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். பொதுவாக காதல் கடிதம் என்றாலே கற்பனைக்கு எட்டிய வரையிலும் ரசனையுடன் கூடிய வசனங்கள் அதிகம் இருக்கும். ஆனால், அதை எல்லாம் தாண்டி கலைநயத்துடன் இந்த கடிதத்தை அந்த கார்டூனிஸ் வடிவமைத்துள்ளார்.

கடிதத்தின் ஒரு பக்கம் முழுவதும் காதல் வார்த்தைகளும், அன்பை வெளிக்காட்டும் வாசகங்களும் நிரம்பியிருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் அழகான ஓவியங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியம் இருக்கிறது என தோன்றுகிறதா உங்களுக்கு? ஆம், இருக்கத்தான் செய்கிறது. கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அதை நீங்கள் ஒவ்வொரு மடிப்பாக, மடித்தால் இறுதியாக ஓர் அழகிய ஓவியங்களை கொண்ட வீடு போன்ற தோற்றம் உங்களுக்கு கிடைக்கும். அதன் நுழைவு வாயிலில் ”உள்ளே நுழைவதற்கான வழி இதுதான்’’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை டிவிட்டரில் சர்டோனியஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அது டிரெண்டிங் ஆகி வருகிறது.

அன்பை வெளிப்படுத்தும் பிற கடிதங்கள்

காதல் கடிதங்கள் மட்டும் தான் என்றல்ல, குடும்ப உறவுகளுக்குள் அன்பை வெளிப்படுத்தும் கடிதங்கள் கூட, வரலாற்றுச் சுவடுகளாக அழியாமல் உள்ளன. அமெரிக்கா - வியட்நாம் இடையே போர் நடந்தபோது, வியட்நாமைச் சேர்ந்த தனது சகோதரர் 52 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய கடிதம் கடந்த 2020 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் பெண் ஒருவர். மே 10, 2020 தேதியிட்டு டெலிவரி செய்யப்பட்ட அந்தக் கடிதம் 1968 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது ஆகும்.

கடிதத்தை முதலில் பிரித்து படித்த பார்த்தபோது, “ஹாய் சகோதரி. உனது கடிதம் இப்போதுதான் கிடைத்தது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து, அந்தப் பெண் குழப்பம் அடைந்தார். ஆனால், அதை மேலும் தொடர்ந்து படித்தபோது, போரில் பணியாற்றிய தனது சகோதரர் வில்லியம் லோன் எழுதிய கடிதம் என்பதை அவர் புரிந்து கொண்டார். மொத்தம் 5 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் போர் அனுபவங்கள் குறித்து அவர் விவரித்திருந்தார்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!