நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்கள் தினமும் வேக வைத்த முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

 இன்று பெண்களைப் போன்றே ஆண்களும் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.


இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால் ஆண்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும்.

முட்டையில் ஏராளமான உடலுக்கு வேண்டிய முக்கிய சத்துக்கள் உள்ளன.

முட்டையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறுவதோடு, உடலுக்கு ஆற்றலும் உடனடியாக கிடைக்கும்.


நன்மைகள்

  1. வேக வைத்த முட்டையை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் பலவீனம் நீங்குவதாக கருதப்படுகிறது.
  2. முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. ஆகவே வேக வைத்த முட்டைகளை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு, உடல் பலவீனமும் நீங்கும். 
  3. வேக வைத்த முட்டைகளை உண்பது ஸ்டாமினாவை அதிகரிக்க உதவுகிறது.
  4.  இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  5. முட்டையில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. இது உடலின் ஸ்டாமினாவை அதிகரித்து, உடல் பலவீனத்தை நீக்குகிறது.
  6. எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் ஸ்டாமினாவை அதிகரிக்க ஒரே சிறந்த வழி வேக வைத்த முட்டைகளை உண்பது தான்.  
  7. வேக வைத்த முட்டைகளை உண்பதன் மூலம் கருவுறாமை பிரச்சனை நீங்கும்.
  8. முட்டையில் உள்ள புரோட்டீன், உடலை வலுவாக்குவதோடு, மலட்டுத்தன்மையில் இருந்து பாதுகாக்கிறது.
  9. கருவுறுதல் திறனை வலுவாக்க வேண்டுமானால், தினமும் வேக வைத்த முட்டைகளை 1-2 சாப்பிட வேண்டும்.  
  10. வேக வைத்த முட்டைகளை உண்பது உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதுவும் முட்டையின் மஞ்சள் பகுதியை நீக்கிவிட்டு வெள்ளைப் பகுதியை சாப்பிடுவது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  11. எனவே நீங்கள் வேக வைத்த முட்டைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறுவதோடு, இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் புரோட்டீன், எலும்புகளை வலுபடுத்தும். இதனால் மூட்டு வலி பிரச்சனைகள் நீங்கும்.  



குறிப்பு

ஒரு நாளைக்கு எத்தனை வேக வைத்த முட்டைகளை சாப்பிடலாம் என்று பலரும் கேட்கலாம்.


ஒரு நாளைக்கு 2-3 வேக வைத்த முட்டைகளை சாப்பிடலாம். ஆனால் ஒரு முட்டையே தேவையான சக்தியை அளிக்கும்.

உங்களுக்கு முட்டை அலர்ஜி என்றால், மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் உங்கள் டயட்டை தீர்மானியுங்கள்.



ALSO READ : உடல் தோற்றம் தரும் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கலாம்



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்