நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுள் மெசேஜஸில் புதிய அம்சங்கள்:

 இன்றைய டிஜிட்டல் உலகில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சாதனம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். 


அதில் மெசேஜிங் சேவைக்கு எப்போதும் டிமாண்ட் இருப்பதுண்டு. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுள் மெசேஜஸில் (Messages) புதிய அம்சங்களை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். 


கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு குழு சில புதிய அம்சங்களை மெசேஜஸில் சேர்த்துள்ளது. அதன்படி ஐபோன் பயனர்கள் ஆண்ட்ராய்டு போன்களுக்கு அனுப்பும் ஐ-மெசேஜ் எமோஜி ரியாக்ஷன்ஸை பெறும் சப்போர்ட், கூகுள் போட்டோக்களை மெசேஜில் ஒருங்கிணைக்கும் வசதி, யூடியூப் ப்ரிவியூ, தானியங்கு முறையில் ஆட்டோ டெலிட் ஆகும் OTP, முக்கியமான செய்திகளுக்கு ரிப்ளை மற்றும் ஃபாலோ செய்ய பயனர்களை நினைவூட்டும் ‘Nudges’ வசதி உட்பட மேலும் சில அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிப்படியாக இந்த புதிய வசதிகளின் அப்டேட் பயனர்களுக்கு ரோல்-அவுட் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்.



ALSO READ : 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்...அமேசான் அறிவிப்பு


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்