நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புடவை கட்டுனா அழகா இருக்கணுமா? உங்களது உடலமைப்புக்கு ஏற்ற புடவைகளை இந்த டிப்ஸ் படிச்சு தேர்வு செய்யுங்க..

உங்கள் தோற்றத்தை மேம்படுத்தி ஸ்டைலிஷ் லுக் கொடுக்க கூடிய புடவைகளை உங்களுடைய உடல் அமைப்பிற்கு ஏற்றார் போல் தேர்வு செய்வது எப்படி.
உயரமான மற்றும் மெலிந்த உடல்வாகு:

உயரமாகவும், மெலிந்த உடல்வாகு ம் இருந்தால், ஜார்ஜெட், ரா சில்க், டஸ்ஸார், சிஃப்பான் உள்ளிட்ட பலவிதமான மெட்டீரியல் புடவைகளை அணியலாம். பெரிய மற்றும் தடித்த டிசைன்கள் மெலிந்த உடல் தோற்றத்தைக் கொண்ட பெண்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த வகை சேலையை அணியும் போது, ஒல்லியான தோற்றம் கொண்ட பெண்களுக்கு வளைவு தெளிவுடன் அம்சமான தோற்றத்தை கொடுக்கிறது.
லேஸ் ஒர்க், அகலமான பார்டர்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட வேலைகளுடன் கூடிய புடவைகளையும் முயற்சிக்கலாம். காட்டன் புடவைகளை அணிந்தால் ஓவர் உயரமாக இருக்கும் பெண்கள் சற்றே குறைந்த அளவில் தெரிய வாய்ப்புள்ளது.
பேரிக்காய் வடிவ உடல்வாகு:

வளைவுகளுடன் கூடிய ஒல்லியான மேற்பகுதி மற்றும் கொஞ்சம் பருமனான கீழ் பகுதியைக் கொண்ட பேரிக்காய் போன்ற உடலமைப்பு கொண்ட பெண்கள், ஜார்ஜெட் வகை புடவைகளை அணியலாம். இவை உடலின் மேல் மற்றும் கீழ் பாகத்திற்கு இடையிலான வேறுபாடுகளை களைந்து, உடல் அழகை சமமாக காட்ட உதவும்.
பட்டுபுடவையில் பனாரஸ் வகையை முயற்சிக்கலாம். கனமான எம்பிராய்டரி, நுட்பமான பிரிண்ட்கள் மற்றும் அடுக்கடுக்கான பார்டர்கள் இருந்தால் அவை உங்களுடைய தோற்றத்தை மேலும் உயர்த்திக்காட்டும்.
பூசிய உடலமைப்பு:

உடல் பருமனாக உள்ள பெண்களுக்கு அவர்களது வளைவுகளை எடுத்துக் காட்டக்கூடிய புடவை தேவை. எனவே பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும் போது, பூசிய உடல்வாகைக் கொண்ட பெண்கள் ஜார்ஜெட் அல்லது சிஃப்பான் புடவைகளை அணிவது பொருத்தமாக இருக்கும். ஸ்டைல் ​​இன்ஸ்பிரேஷன் தேவை என்றால், வித்யா பாலன் அல்லது சோனாக்ஷி சின்ஹாவைப் பின்தொடரலாம்.
கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு முழு கை அல்லது குட்டை கை ஜாக்கெட்டுகளுடன் கூடிய அடர் நிற புடவைகளை அணியலாம். வயிற்றை மறைக்க வசதிகாக நீண்ட ஜாக்கெட்டுகளை அணிவது பொருத்தமாக இருக்கும்.
மிதமான உயரம் மற்றும் மெலிந்த உடல்வாகு:

இத்தகைய உடல் அமைப்பு கொண்ட பெண்கள் ஆர்கன்சா, காட்டன் அல்லது பட்டுப் புடவைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கனமான எம்பிராய்டரி மற்றும் வெளிர் நிறங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். மணி அல்லது ப்ரோகேட் வேலைகளைகொண்ட புடவைகளையும், ஸ்லீவ்லெஸ், டியூப், பேக்லெஸ் மற்றும் ஹால்டர் நெக் டிசைன்களைக் கொண்ட பிளவுஸ்களையும் அணியலாம். உயரத்தை கொஞ்சம் அதிகரித்தும், உடலை சற்றே தடிமனாகவும் காட்ட பெரிய பிரிண்ட்களுடன் கூடிய புடவைகளை தேர்வு செய்யலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!