நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பொழுதுபோக்குக்காக மீன்பிடித்து லட்சாதிபதியான நண்பர்கள்... இங்கிலாந்தில் விநோதம்!

 விலை உயர்ந்த மற்றும் அரிய மீன் இனங்களில் ஒன்றான ப்ளுபின் டுனா (Bluefin Tuna Fish) என்ற 328 கிலோ எடையுடைய மீனை பிடித்து லட்சத்தில் விற்பனை செய்துள்ளனர்.


இங்கிலாந்தில் விடுமுறை நாளில் பொழுதுபோக்குக்காக மீன்பிடித்த நண்பர்கள் 3 பேர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி சீட்டில் ஒரே நாளில் பம்பர் பரிசு விழுந்து ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக பலர் மாறியிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால், விடுமுறை நாளில் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கச் சென்று, ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியிருக்கிற தகவலை எப்போதாவது கேள்விபட்டிருக்கிறோமா?. இங்கிலாந்தில் இந்த விநோதம் நடந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 3 நண்பர்கள் விடுமுறை நாளில் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

கடந்த வாரம் அவர்கள் வழக்கமான கடல் பொழுதுபோக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, அவர்களே எதிர்பார்க்காத வகையில் விலை உயர்ந்த மற்றும் அரிய மீன் இனங்களில் ஒன்றான ப்ளுபின் டுனா (Bluefin Tuna Fish) என்ற 328 கிலோ எடையுடைய மீனை பிடித்து லட்சத்தில் விற்பனை செய்துள்ளனர்.

கைல் கவிலா (Kyle Kavila), காரெத் வலாரினோ (Gareth Valarino) மற்றும் சியான் டெஷூஷியா (Sean Desuisa) ஆகிய மூன்று நண்பர்களும் பல ஆண்டுகளாக பொழுதுபோக்குக்காக கடலில் மீன்பிடிக்கச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் ஜூலை 9 ஆம் தேதியும் வழக்கமான இந்த கடல் பயணத்தை மேற்கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்போது அவர்கள் வலையில் மிகப்பெரிய ராட்ச மீன் பிடிபட்டுள்ளது. இதனை உணர்ந்த அவர்கள் மீனை படகில் ஏற்றுவதற்கு கடுமையாக போராடியுள்ளனர். நண்பர்களில் இருவர் கடலில் குதித்து மீனை படகில் ஏற்றியுள்ளனர். அவர்கள் சென்ற படகு வெறும் 15 அடி நீளம் மட்டுமே உடையது என்பதால் 328 கிலோ மீனை அதில் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்ப, படாதபாடுபட்டுள்ளனர். ஒரு புறம் விலையுயர்ந்த மீன் சிக்கிவிட்டது என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வெற்றிகரமாக கரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

மிகப்பெரிய மீனை 3 ஆக வெட்டி மீன் சந்தையில் சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஒருவேளை இதே மீனை ஜப்பானில் விற்பனை செய்திருந்தால், இங்கிலாந்தில் விற்பனை செய்த விலையைக் காட்டிலும் 15 மடங்கு கூடுதலாக பணம் கிடைத்திருக்கும். இந்த இடத்தில், ப்ளூ டுனா மீன் மிகவும் விலையுயர்ந்த ஒன்று எனக் கருதலாம். இந்த மீன் விலை உயர்ந்தது என்றாலும், இதற்கும் மேலான விலை உயர்ந்த மீன்கள் இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த கியோஷி கிமுரா என்பவர் 278 கிலோ ப்ளு டுனா மீனைப் பிடித்து 25 கோடியே 28 லட்சத்துக்கு விற்பனை செய்தது இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்