நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாயாலேயே கின்னஸ் உலக சாதனை செய்து வாயை பிளக்க வைத்த சமந்தா!

 எவ்வளவு பெரிய உணவாக இருந்தாலும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் ஒரே வாயில் சாப்பிட்டு முடித்து விடுவதே சமந்தாவின் சிறப்பு.


பெரியவர் முதல் சிறியவர் வரை ஏராளமானோர் தங்களது திறமையை கொண்டு கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர் . அந்த வரிசையில் தற்போது பெண் ஒருவர் உலகில் மிகப்பெரிய வாயை கொண்டிருப்பதாக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டெல். டிக் டாக் செயலியில் ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தனது டிக் டாக் பக்கத்தில் ஏராளமான வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். 31 வயதாகும் அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சாப்பிடுவது தொடர்பானது தான்.

ஒரே நேரத்தில் மிகப்பெரிய தின்பண்டத்தை வாயில் வைத்து சாப்பிடுவார். எவ்வளவு பெரிய உணவாக இருந்தாலும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் ஒரே வாயில் சாப்பிட்டு முடித்து விடுவதே சமந்தாவின் சிறப்பு. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் சமந்தா மிகப்பெரிய வாயை பெற்றிருப்பதேயாகும். இவரது வாய் சாதாரண மனிதர்களின் வாயை விட பெரியதாக இருக்கும். இவர் அதிக நீளத்திற்கு வாயை திறப்பதில் திறமைசாலியாக இருக்கிறார். இதனால் பெரிய அளவிலான ஆப்பிள், சாண்ட்விச் ஆகியவற்றை ஒரே வாயில் சாப்பிட்டு விடுகிறார். இவரின் பிரம்மிக்க வைக்கும் செயல் டிக் டாக்கில் பிரபலமான நிலையில், இவரை 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்த சமந்தா அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். சமந்தா வாயில் உள்ள இடைவெளியின் அகலம் 6.56 செ.மீ, அதாவது 2.56 இன்ச் கொள்ளளவாக உள்ளது. ஒட்டு மொத்த வாயையும் அளந்து  பார்த்தால் 10 செ .மீ.க்கும் அதிகமாக உள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். கின்னஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வாயை கொண்ட பெண் என்ற சான்றிதழையும் அவருக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய சமந்தா, "என் வாயால் பிரபலமாக முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் அது நடந்துள்ளது என்னால் நம்பமுடியவில்லை இது மிகவும் அருமையாக இருக்கிறது என மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். "பெரிய உடல் பாகம் அல்லது தனித்துவமான திறமையால் கின்னஸ் உலக சாதனைப் பட்டம் பெற விரும்பும் பலரும் தங்கள் கனவுகளைத் தொடருங்கள்" என்றும் அவர் ஊக்குவித்தார். ,மேலும் குழந்தைகள் தனது பெரிய சைஸ் வாயை கேலி செய்வார்கள் என்பதை நினைவுகூர்ந்து வருத்தப்பட்டார். மேலும் இப்போது கொண்டாட்டத்தின் ஒரு புள்ளியாக எனது வாய் மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார். சமந்தாவிற்கு தற்போது சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!