கூகுள் மீட்டில் திருமணம்... சோமேட்டோ மூலம் சாப்பாடு! வியக்க வைத்த ஜோடிகளின் திருமணம்;
- Get link
- X
- Other Apps
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியாவிலும் அதன் வீரியம் அதிகமாக தான் உள்ளது. இந்தியாவில், தமிழகத்தில் திருமணத்தில் 100 மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதேபோல், பல மாநிலங்களிலும் திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சந்தீபன் சர்க்கார் மற்றும் அதிதி ஹாஸ் ஜோடி தங்களின் திருமணம் ஜனவரி 24-ம் தேதி Google Meet-ல் நடைபெறும் எனவும், விருந்தினர்கள் அதில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு Zomato ஆப் மூலம் அவர்களின் வீட்டிற்கே உணவு டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மணமகன் சாண்டிபென் தெரிவிக்கையில், “நான் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தேன்.
இதனால், வெளியூரில் இருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த ஆன்லைன் திருமணத்தை நடத்துவது குறித்து நான் சொன்ன போது முதலில் அனைவரும் சிரித்தனர். ஆனால், நாம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என பெற்றோர்களிடம் கூறினேன்.
முதலில் ஆச்சரியப்பட்டு பின்னர் சம்மதம் தெரிவித்தனர். இதனால், எங்கள் திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment