நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டேப்லெட் டிவைஸ்களுக்கு ஏற்ப விண்டோஸ் 11-ல் புதிய வசதி......

 கடந்த 2021 அக்டோபர் வாக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. 


சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த இயங்குதளத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் டேப்லெட் சாதனங்களுக்கு ஏற்ற வகையில்  விண்டோஸ் 11-இல் புதிய டாஸ்க் பார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் The Verge செய்தி நிறுவனம், மைக்ரோசாப்ட்  அதனை சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் அது பார்க்க மிகவும் சிறியதாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதில் தேதி, நேரம் மற்றும் பேட்டரி திறன் குறித்த தகவல் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 


மேலும் கூடுதல் ஸ்க்ரீன் ஸ்பேஸிற்காக டாஸ்க் பார் தானாக மறையும் (Hidden) வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Widgets-லும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை விண்டோஸ் இன்சைடர் டீம் உறுதி செய்துள்ளது. 


மேலும் 37 புதிய எமோஜிக்களை விண்டோஸ் 11 கொண்டு வார உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் நாட்களில் மேலும் சில புதிய அம்சங்கள் விண்டோஸ் 11-இல் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்