நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எப்படியெல்லாம் யோசிக்க தோணுது?... இறுதி வரை பாருங்க பானை வயிறும் சிரிப்பில் குலுங்கும்!

 வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்கிநிற்கும் நிலையில் சைக்கிளில் செல்லும் ஒருவர் வேறு வழியில்லாமல் அந்த தண்ணீரிலேயே சைக்கிளில் செல்ல முடிவு செய்கிறார்.


ஆனால் அவரால் தண்ணீருக்குள் கால் வைத்து செல்ல மனமில்லை அதனால் அவர் தன் கையால் சைக்கிளை பிடித்துக்கொண்டு சுவற்றில் காலை வைத்து சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்கிறார்.

தரையில் காலே படாமல் இவர் சுவரில் கால்வைத்து நடந்து செல்வதை யாரோ வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ : உலகின் மிகப்பெரிய 'அமைதி புறா'வை ப்ரொஜக்ட் செய்த சுவிஸ்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!