ஒரு நபரை நாம் நேருக்கு, நேராக சந்திக்கும்போது அவர்களது உடல் மொழியை வைத்து அவர்களை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நபரை நாம் நேருக்கு, நேராக சந்திக்கும்போது அவர்களது உடல் மொழியை வைத்து அவர்களை புரிந்து கொள்ள முடியும். முக பாவனைகள், பேசும் தோரணை ஆகியவை அவர்களது மனதை படம்பிடித்து காட்டி விடும். ஆனால், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் சமயங்களில் இதுபோல புரிந்து கொள்வது கடினம். சில சமயங்களில் நீங்கள் சொல்ல வந்ததை தவறாகக் கூட புரிந்து கொள்வார்கள். நாம் சொல்ல நினைக்கும் சேதியை தவறாக புரிந்து கொள்வதற்கான காரணங்களில், டெக்ஸ் மெசேஜ் முறைதான் முன்னணியில் இருக்கிறது.
எனினும், இந்த காரணத்தை பயன்படுத்திக் கொண்டு, சிலர் நம்மிடையே பொய் சொல்லக் கூடும். அவ்வாறு பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல், அவர்களிடம் நீங்கள் ஏமாறும் தருணங்கள் அடிக்கடி ஏற்படலாம். அதைத் தவிர்க்க, இந்த அறிகுறிகளை வைத்து, ஒரு பொய்யரை நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.
அரைகுறையாக பேசுவது :
நீங்கள் ஆர்வமுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எதிர் முனையில் இருந்து முழுமையான வார்த்தைகளில் பதில் அளிக்காமல், ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாக பதில் அளித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் பாதி உண்மையை மறைத்து மீதியை மட்டும் உங்களிடம் சொல்வார்கள். எந்தவொரு விஷயத்தையும் முழுமையான விளக்கங்களுடன் அவர்கள் பேச மாட்டார்கள்.
பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது :
நீங்கள் மெசேஜ் அனுப்பியவுடன் எதிர் முனையில் அதை பார்த்து விட்டு, உங்களுக்கு பதில் அளிப்பதற்கான ‘டைப்பிங்’ சிக்னல் தெரிகிறது. ஆனால், வெகு நேரமாகியும் பதில் வரவில்லை அல்லது நீண்ட நேரம் டைப்பிங் செய்த பிறகு, மிக சிறிய பதில் வந்து சேருகிறது என்றால், உங்களிடம் என்ன சொல்லலாம் என யோசித்து, கனகச்சிதமாக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றே அர்த்தம்.
வார்த்தைகளில் கவனம் கொள்ளுங்கள் :
சில நபர்கள் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் சுற்றி, வளைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் நீங்கள் பேசும் விஷயத்திற்கு பொருந்துகிறார் போல, கனக்கச்சிதமாக பொய்யை கலந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற நபர்கள் எப்போதுமே பொய் பேசக் கூடியவர்கள் தான். குறிப்பிட்ட பதிலில் இருந்து, சில கேள்விகளை கேட்டீர்கள் என்றால், உண்மை விளங்கக் கூடும்.
கேள்விகளை புறக்கணிப்பது :
நீங்கள் ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கையில், அது எதுவுமே தெரியாததைப் போல, அவர் மற்றொரு விஷயம் குறித்து பேசிக் கொண்டிருப்பார். அல்லது நீங்கள் இரண்டு, மூன்று கேள்விகளை கேட்கும் சமயங்களில், மிக கவனமாக ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பவராக அவர் இருக்கக் கூடும். ஆனால், உங்களுக்கு தேவையான உண்மை தகவல் வந்து சேரும் வரை விடாமல், அழுத்தம், திருத்தமாக கேள்வி கேட்டு பதில் பெற முயற்சி செய்யுங்கள்.
Comments
Post a Comment