நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும் இந்தியாவில் 2 கிரகணங்கள் தெரியும்

 

2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும், அவற்றில் 2 கிரகணங்கள் இந்தியாவில் தெரியும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தூர், 

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
* 2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். தலா ஒரு பூரண சூரிய கிரகணமும், பூரண சந்திர கிரகணமும் ஏற்படும்.

* மே மாதம் 26-ந் தேதி சந்திரகிரகணம் நிகழும். இது மேற்கு வங்காளம், கடலோர ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தெரியும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிறபோது பூரண சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

* ஜூன் மாதம் 10-ந் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நிகழும். அப்போது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி, நெருப்பு வளையமாக காணப்படும். ஆனால் இந்தியாவில் இதை பார்க்க முடியாது.

* நவம்பர் 19-ந் தேதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். இதை அருணாசல பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் குறுகிய நேரத்துக்கு பார்க்க முடியும்.

* டிசம்பர் 4-ந் தேதி பூரண சூரிய கிரகணம் ஏற்படும். சந்திரனின் 97.9 சதவீதம், பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும். இந்த பூரண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog