நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடுத்த சில வாரங்களில் நிலைமை உண்மையில் மோசமடையக்கூடும் - அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோனி பவுசி

 

அடுத்த சில வாரங்களில் நிலைமை உண்மையில் மோசமடையக்கூடும் அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோனி பவுசி என கூறினார்.

வாஷிங்டன்: 

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,11,33,824 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,72,81,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 71 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,80,871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

அமெரிக்காவில் 1,95,73,847 பெர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,41,138 பேர் உயிரிழந்து உள்ளனர். 

பிரிட்டனில் இருந்து மக்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு எதிர்மறையான கொரோனா சோதனைகள் தேவை என்ற அமெரிக்க அதிகாரிகளின் முடிவுக்கு டாக்டர் அந்தோனி  பவுசி ஒப்புதல் அளித்தார்.

இது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோனி பவுசி கூறியதாவது:-

கொரோனா தொற்றுநோயின் மோசமான நிலை இன்னும் வரவில்லை. கொரோனா வைரஸின் மாறுபாட்டை அமெரிக்கா கவனித்து வருகிறது. அந்தோனி பவுசி விடுமுறை பயணங்கள் கொரோனா வைரஸை பரப்புவதால் நாடு  ஒரு முக்கியமான கட்டத்திற்கு  செல்லக்கூடும்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டஜோ பைடனின் கவலையை நான் பகிர்ந்து கொள்கிறேன், அடுத்த சில வாரங்களில் நிலைமை  உண்மையில் மோசமடையக்கூடும் என கூறினார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!