நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று உதயம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

 

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று (திங்கட்கிழமை) உதயமாகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னை, 

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு, சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி வழியாக மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயரும்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடியில் இருந்தபடி, மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, 12.30 மணிக்கு மருத்துவ குழுவினரையும் அவர் சந்தித்து, உருமாறிய புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!