ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? - விளக்கும் மருத்துவர்
- Get link
- X
- Other Apps
ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன.
ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்'. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவி பிடிக்கும்போது என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும்... விளக்குகிறார் அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்.
``ஆவி பிடித்தலால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வருவோர்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க `ஆவி பிடித்தலும்' ஒரு தற்காப்பு முறை என்று மக்கள் தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். உண்மையில், ஆவி பிடிப்பதன் மூலம் எந்தவொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவையும் அழிக்க முடியாது. நமக்கு ஜலதோஷம் அல்லது சளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மூக்கடைப்பிலிருந்து உடனடியாக விடுபட மட்டுமே `ஆவி பிடித்தல்' உதவுகிறது. தவிர நோய்க்கிருமிகளால் நமக்கு ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ இதனால் முடியாது. சொல்லப்போனால்`ஆவி பிடித்தல்' என்பது ஒரு மருத்துவ முறையே அல்ல. மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிய வழி. அவ்வளவே.
- Get link
- X
- Other Apps





Comments
Post a Comment