நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஜனவரி மாதம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு??
தமிழகத்தில் இதுவரை 8,14,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 12,069 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆரம்ப காலத்தை காட்டிலும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் கூடும் சூழல் நிலவுவதால் கொரோனா அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய சிலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இது உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவாக இருக்குமோ? என்கிற அச்சம் அனைவர் மத்தியிலும் உள்ளது. கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை செயல்பாடுகளும் இன்று 4 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது. இதனால் மேலும் சில தளர்வுகளுடன் ஜனவரி மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் பின்னர் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!