நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகச் சுருக்கமா? இதனை மறைய வைக்க இதோ சில அசத்தலான டிப்ஸ்!

 பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலத்து பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.

ந்தகாலத்து பெண்கள் முகச்சுருக்கம் இல்லாம் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள இயற்கை வழிகளே பின்பற்றினார்கள்.

ஆனால் இன்று கடைகளில் விற்கப்படும் ஏகப்பட்ட கெமிக்கல் நிறைந்த கிறீம்கள் போன்றவற்றையே பயன்படுத்துகின்றார்கள்.

இருப்பினும் இது நிறந்த தீர்வினை தராது. முகச்சுருக்கத்தை எளியமுறையில் நீக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


  • இளமையிலேயே முதுமை தோற்றத்துடன் இருப்பவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராஃபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய்கள் சாப்பிட வேண்டும்.

  •  தக்காளிப் பழச்சாறு நன்கு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.  

  • தரமான சந்தனத் தூள், கிளிஸரின் சேர்த்து நன்கு குழைத்து அதை முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரத்திற்கு பின் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வர முக சுருக்கம் நீங்கும்.

  • சந்தனத் தூளுடன் ஓட்ஸ் மாவு சேர்த்துப் பால் கலந்து அல்லது வெள்ளரி விதையை நன்றாக அரைத்து சேர்த்து அத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முக சுருக்கம் மறையும்.

  • முட்டைக்கோஸ் சாறு, சிறிதளவு ஈஸ்ட், ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து 20 நிமிடம் முகத்தில் தடவி மிதமான சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முக சுருக்கம் மறைந்து பொலிவு பெறும்.

  • கேரட் சாறுடன் சிறிதளவு கடலை மாவும் கலந்து பேஸ்ட் போன்று குழைத்து அதனை முகத்தில் பூசி சிறிது நேரத்தில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகசுருக்கம் நீங்கும்.

  • பசும் மஞ்சளை அரைத்து பாசிப்பயறு மாவுடன் சேர்த்து தினமும் உடலில் பூசி பின்னர் குளித்தால் தோல் சுருக்கம் நீங்கி இளமையுடன் வாழலாம்.

  • வறண்ட சருமம் உடையவர்கள் வெறும் கேரட் சாறினை மட்டும் முகத்தில் தேய்த்து வர முக சுருக்கம் மறையும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!