Dolo 650: கொரோனா அச்சத்தால் விற்பனையில் சாதனை படைத்த டோலோ 650 மாத்திரை!
- Get link
- X
- Other Apps
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாத்திரை டோலோ 650 (Dolo-650) கோவிட் அலைகளில் மிக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாத்திரை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனம், ஜனவரி 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், டோலோ 650 என்ற மருந்தின் தேவை இது வரை இல்லாத சாதனை அளவாக உள்ளது.
டோலோ-650 ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல் - உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், இதய நோய், சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, டோலோ-650 மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனையடுத்து, கொரோனா மூன்றாவது அலையில் டோலோ 650, மார்ச் 2020 முதல் இதுவரை ரூ.507 கோடி அளவிற்கு விற்பனையாகி, பாராசெடாமல் மாத்திரையின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த 305 கோடி மாத்திரைகளும் செங்குத்தாக அடுக்கப்பட்டால், அது உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட கிட்டத்தட்ட 6,000 மடங்காக இருக்கும் என்கின்றனர் வால்லுநர்கள்.
மேலும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விட 63,000 மடங்கு உயரமாக இருக்கும் என்ற கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ALSO READ : கூகுள் மீட்டில் திருமணம்... சோமேட்டோ மூலம் சாப்பாடு! வியக்க வைத்த ஜோடிகளின் திருமணம்;
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment