நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலை டிபன் செய்ய டைம் இல்லையா? 15 நிமிடத்துல ஈஸியா இதை செய்யலாம்...

 காலை உணவு சமைக்க நேரமில்லைனா 15 நிமிடங்கள்ல சட்டுனு இந்த டிபனை செஞ்சு முடிக்கலாம்.


  • 15 நிமிடங்களில் செய்யக்கூடிய டிபன் வகைகள்
  • ஈஸியா டிபன் செஞ்சு சாப்பிடலாம்
  • ஆபீஸ் போறவங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க


காலைல எழுந்து பிரேக்ஃபாஸ்ட் செய்ய நிறைய பேருக்கு நேரம் இருக்கறதில்ல. ஆனா அரை மணி நேரத்துக்கும் குறைவா செய்யறதுக்கு நிறைய வெரைட்டியான ஐட்டம்கள் இருக்கு. அதை ஒன்னொன்னா பார்க்கலாம்.

புட்டு வகைகள்

இன்னைக்கு தேதியில எல்லாமே Instantதான். வகை வகையான புட்டு மாவு கடைகள்ல கிடைக்குது. வாங்கிட்டு வந்து இட்லி சட்டியில அவிச்சா 15 நிமிடத்துல டிபன் ரெடி ஆயிடும். இதுக்கு சைடு டிஷ் கூட தேவையில்ல. தேங்காய் துருவலும் சர்க்கரையும் வெச்சு சாப்பிட்டுக்கலாம்.

சேமியா வகைகள்

பெரும்பாலும் நமக்கு ஒரு சேமியா வகைதான் தெரியும். ஆனா இப்ப மார்க்கெட்ல கேழ்வரகு, ராகி, கம்பு, திணை, குதிரைவாலினு எல்லா வகை சேமியாவும் வந்துடுச்சி. புட்டு செய்யுற மாதிரியே இட்லி சட்டியில அவிச்சு உடனே சாப்பிட சரியான டிபன் வகை சேமியா. தாளிச்சு சாப்பிட்டா இன்னும் டேஸ்ட் தூக்கலா இருக்கும்.


பிரட், ஜாம், பட்டர்

இது என்ன டா நம்ம ஊருக்கு செட் ஆகாத ஐட்டமா இருக்குனு யோசிக்காதீங்க. நேரம் இல்லாத நேரத்துல கைகுடுக்கற அம்சமான ஐட்டம். பக்கத்து கடையில ஒரு பிரட் பாக்கெட்டும் பட்டர் ஜாமும் வாங்கிட்டா 15 நிமிடம் கூட தேவையில்ல. 5 நிமிடத்துல டிபன் தயார் ஆயிடும். கூட Peanut பட்டர் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. சத்தான டிப்பனாவும் ஆச்சு.


முட்டை, பால்

எதுவுமே கிடைக்காத நேரத்துல டக்குனு கைகுடுக்கற விஷயம் முட்டைதாங்க. 2 இல்லனா 3 முட்டையை சாப்பிட்டுட்டோம்னா சாயங்காலம் வரைக்கும் பசி எடுக்காது. ரொம்ப விக்குச்சினா கூட ஒரு கிளாஸ் பால் சேர்த்துக்கோங்க. அருமையா உள்ளே இறங்கிடும். முட்டையை அவிச்சு சாப்பிடுறது நல்லது. நேரம் இல்லைனா அடை ஊத்திக்கோங்க.


நூடுல்ஸ், பாஸ்தா

நூடுல்ஸ் இல்லனா பாஸ்தா. ரெண்டும் ஒரே ஐட்டம்தான். வேற வேற டிசைன்ல இருக்கும். நிறைய பேருக்கு Maggi மாதிரியான Instant Noodles பிடிக்காது. அவங்க நூடுல்ஸ் இல்லனா பாஸ்தாவை வாங்கி வெச்சுக்கிட்டா தேவைப்படுற நேரத்துல வேக வெச்சு சாப்பிடலாம். அதுக்கு அப்பறம் கூட வெங்காயம் தக்காளி தாளிச்சு மசாலா போட்டு கிண்டுனா 15 நிமிட நூடுல்ஸ் ரெடி.

பழங்கள்

பழங்கள் மாதிரியான சத்தான உணவு கிடையாது. ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் எல்லாத்தையும் சேர்த்து அறுத்துப் போட்டு அப்படியே பச்சையா சாப்பிடலாம். சமைக்குறதுக்கான நேரமே தேவையில்லை. ஆரோக்கியமான உணவும் கூட. பத்தலனா கூட ஒரு கிளாஸ் பால் குடிச்சுக்கோங்க.


புல்லட் புரூப்ஃ டீ

ஒரு கப் பால் எடுத்துக்கிட்டு அதுல ஒரு 30 கிராம் வெண்ணையை சேர்த்துப் போட்டு கொதிக்க வெச்சா புல்லட் புரூஃப் பால் ரெடி. இந்த ஒரு கப் பாலை குடிச்சாலே மதியானம் வரைக்கு பசியே எடுக்காது. அப்படி ஒரு விஷயம் இதுல இருக்கு. கூட டீ டிகாஷன் கலந்துக்கிட்டா புல்லட் ஃபுரூஃப் டீ ரெடி. சர்க்கரை சேர்க்குறதும் சேர்க்காததும் உங்க விருப்பம்.

பருப்பு வகைகள்

காலைல சாப்பிட எதுவுமே இல்லனா இதை டிரை பண்ணுங்க. பாதாம், முந்திரி, பிஸ்தா கூடவே காய்ஞ்ச திராட்ச்சை. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடாம கொஞ்டம் எக்ஸ்டிராவா சேர்த்து சாப்பிட்டா நல்லாவே பசி தாங்கும். பாதாம்ல அதுக்கான சத்துகள் இருக்கு. 

இதெல்லாம் உடனடியா செய்யக்கூடிய டிபன் வகைகள் மட்டும்தான். ஆனா சமையல்ங்குறது ரசிச்சு நேரம் எடுத்து செய்யக்கூடிய விஷயம். நேரம் இருக்கறப்ப நல்ல டிபனா செஞ்சு சாப்பிடுங்க.


ALSO READ : அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கிவி பழம்........

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!