நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கிவி பழம்........

 சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம்.


கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம். 

கிவி பழத்தை சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் வளர்கிறது. கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தவிர்க்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆகையால், நமது அன்றாட உணவில் கிவி பழத்தை உட்கொள்வது மிக நல்லது. கிவி பழம் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 


இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.


கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது. மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது. கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது. 


கிவியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. கிவியில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், உடற்தகுதியை கவனித்துக்கொள்பவர்கள் கிவியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தை விட கிவியில் அதிக பொட்டாசியம் மற்றும் பாதி கலோரிகள் உள்ளன. கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி இதில் உள்ளது. கிவியில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான சக்தியை இது அதிகரிக்கிறது. 



ALSO READ : உடல் எடையை குறைக்கும் சத்தான கொள்ளு சாதம் செய்ய ரெசிபி...


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!