நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தன்னை தாக்கியவர்களை மின்னல் வேகத்தில் பலி வாங்கிய எருமை! பரிதாப நிலையில் இளைஞர்கள்

 எருது வண்டி ஓட்டும் விழாவில் நெடுஞ்சாலையில் பழிவாங்கிய எருது ஒன்றின் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

ந்த வீடியோவில் சுமார் 4 பேர் நான்கைந்து பேர் எருது வண்டியில் அமர்ந்திருக்கின்றனர்.

மின்னல் வேகத்தில் ஓடும் எருதுவை வண்டியில் இருப்பவர்கள் சாட்டை வைத்து அடித்துக் கொண்டு, இன்னும் வேகமாக செல்லும் வகையில் உசுபேத்துகின்றனர்.

அந்த வண்டிக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களும் ஆரவாரக் குரல் எழுப்பி, எருதை முடுக்கிவிடுகின்றனர்.

இதேபோன்று கொஞ்ச தூரத்துக்கு செல்லும் அவர்களை, சரியான தருணம் பார்த்து எருது பழிவாங்கி விடுகிறது. இந்த காட்சியை நீங்களே பாருங்கள். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!