நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு... மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத காட்சிகள்......

 கடும் வெப்பம் நிலவும் பாலை வனத்தில் பனிப்பொழிவு ஏற்படுவதை பார்ப்பது என்பது மிகவும் அரிது.

டமேற்கு அல்ஜீரியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் இந்த வார தொடக்கத்தில் வெப்பநிலை -2 டிகிரியாகக் குறைந்திருந்த நிலையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன் விட்யோவும் புகைப்படங்கள் மிகவும் வைரலாகின.

ஐன் செஃப்ரா, பாலைவனத்திற்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் அட்லஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

கடந்த 42 ஆண்டுகளில், 1979, 2016, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், நகரத்தின் மீது பனிப்பொழிவு ஐந்தாவது முறையாகும்.

எதிர்பாராத விதமாக பனி பொழிவதைக் கண்டதும், பனிக்கட்டி மணலில் பிரமிக்க வைக்கும் வடிவங்களை உருவாக்கியது. சமூக ஊடகங்களில், பனி மூடிய சஹாரா பாலைவனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி, மக்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.



ALSO READ : Benefits of Sleeping Naked| ட்ரெஸ் இல்லாம தூங்கினா இந்த நன்மைகளா? ஆராய்ச்சியாளர்கள் இப்படி சொல்றாங்க..

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்