Weight loss Detox Water | நமது அன்றாட உணவில் சில சிறிய மாற்றங்கள் கிலோ எடையைக் குறைக்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?
இன்றைய இளம் பெண்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது என்பது தான். சீக்கிரம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் சோசியல் மீடியாவில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான வெயிட் லாஸ் குறிப்புகளை முயற்சிக்கிறார்கள். ஆனால் நம்மில் பலரும் சொந்த உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு எது சரி எது தவறு என்பதை சரிபார்க்க முடியவில்லை. ஆனால் நமது அன்றாட உணவில் சில சிறிய மாற்றங்கள் கிலோ எடையைக் குறைக்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உதாரணமாக, சீரகம், ஓமம், பெருஞ்சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை சேர்ப்பது, உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சீரகம், ஓமம், பெருஞ்சீரகம் ஆகியவற்றைக் கொண்டு உடல் எடையை குறைக்க உதவும் டீடாக்ஸ் பானங்களை தயாரிப்பது எப்படி பலனளிக்கும் என விளக்கியுள்ளோம்.

சீரகம்:
சீரகம், அதில் அடங்கியுள்ள நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது, குறிப்பாக இது நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் உடலின் உட்புறத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. செரிமானத்திற்கு சிறப்பான பலன் தரும் சீரகம், சிறந்த வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே இது உடல் எடையை குறைப்பதிலும் சிறப்பாக பங்காற்றுகிறது. பெங்களூரை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் அஞ்சு சூட்டின் கூற்றுப்படி, "தினமும் காலையில் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் குடித்து வருவது, ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றில் எதிர்பார்த்த பலனை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

ஓமம்:
ஓமம் அல்லது கேரம் விதைகள் நமது செரிமான செயல்முறையை விரைவுபடுத்துவதோடு தேவையற்ற எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், உங்கள் எடை இழப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு ஓம நீர் சிறந்த பலனளிக்க கூடியதாக உள்ளது.

பெருஞ்சீரகம்:
பெருஞ்சீரகம் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது, இந்த பெருஞ்சீரகம் பசியை அடக்க உதவுகிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தடுக்க முடியும். மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. உடலில் நீர் கோர்ப்பதை குணப்படுத்துவதிலும் பெருஞ்சீரகம் பெரும்பாங்காற்றுகிறது. குறிப்பாக PMS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெருஞ்சீரகம் சிறந்தது.
உடல் எடையை குறைக்கும் பானம்:
எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மசாலா டீடாக்ஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்... சீரகம் - 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 லிட்டர் இந்த மூன்று விதைகளையும் இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் உங்களுக்கான டீடாக்ஸ் பானம் தயாராகிவிடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதலில் இந்த பானத்தை பருகி வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
Comments
Post a Comment