நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

202 அடி உயர அயர்லாந்து 'தீ உற்சவம்'...உலக சாதனையாக உருவெடுத்தது!

 அயர்லாந்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீ உற்சவ விழா நடப்பாண்டில் புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.


அயர்லாந்தில் ஆண்டு தோறும் ஜூலை 12 ஆம் தேதியன்று பான்பைர் (bonfire) எனப்படும் தீ உற்சவ விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

நம் ஊரில் கார்த்திகை மாதத்தில் கொளுத்தப்படும் சொக்கப்பனை போலவே இந்த தீ உற்சவ விழாவும் கொண்டாடப்படுகிறது. ஊரின் குறிப்பிட்ட இடத்தில் மரக்கட்டைகள் உயரமாக அடுக்கப்படுகின்றன.

இரவில் அதற்கு தீ வைத்து எரிக்கப்படுவதோடு விழா நிறைவடைகிறது. அப்போது பருந்துப் பார்வையில் பார்த்தால் தீபத்திருவிழா போல ஒளி வெள்ளத்தில் காட்சி அளிக்கும் ஊரை காண முடியும்.

இந்த விழாவில் ஒரு சாதனை செய்ய முடிவெடுத்த பெல்ஃபாஸ்ட் நகரத்தினர், தீ வைப்பதற்காக கட்டமைக்கும் கோபுரம் போன்ற அமைப்பை மிக உயரமாகச் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இது உலக சாதனையாகவே மாறியது. 202 அடி உயரமான பிரமாண்டமான கோபுர அமைப்பு காண்போரை வியக்க வைத்தது.1690 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் நினைவாகவே இந்த தீ உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

புரோட்டஸ்டண்ட் பிரிவு அரசரான வில்லியம், கத்தோலிக்க பிரிவு அரசரான ஜேம்ஸை இந்தப் போரில் தோற்கடித்தார். போரின் போது படைவீரர்களுக்கு வழிகாட்ட ஆங்காங்கே பிரமாண்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.

தொலைதூரத்தில் அந்த வெளிச்சத்தை கண்டவர்கள் தங்கள் இலக்குகளுக்கு எளிதில் சென்றடைந்தனர். இதனை நினைவு கூரும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் 202 அடி உயர கோபுரம் போன்ற கட்டுமானத்திற்கு தீ வைக்கப்பட்டது.

தீ உற்சவத்திற்காக 202 அடி உயர கட்டுமானம் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன.


ALSO READ : மரங்களுக்கு இடையே மனிதன் ஓடுகிறானா? நீங்க நல்லா ஏமாந்துட்டீங்க........

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!