நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்...........

 பொதுவாக இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.

எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி போடுகிறார்கள். இருப்பினும் தற்காலிகம் தான்.

அந்தவகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.



  • பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

  • வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

  • ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

  • கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

  • இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

  • மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

  • தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

  • சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

  • தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.   




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!