வாழைத்தண்டு சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்......
- Get link
- X
- Other Apps
ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை.
அதிலும் நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டில் ஏராளாமான நன்மைகள் கொட்டி கிடக்கின்றன.
சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வபோது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
வாழைத்தண்டு பொட்டாசியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு மற்றூம் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிசை அளிக்க உதவும்.
வாழைத்தண்டுகளின் சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
வாழைத்தண்டு அதிக நார்ச்சத்து உள்ளடக்கத்தை கொண்டுள்ள உணவு. இதை எடுத்துகொள்வதன் மூலம் சிறந்த எடை இழப்பு சாத்தியமாகிறது. நார்ச்சத்து உடலின் உயிரணுக்களில் சேகரிக்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் அளவை குறைக்க செய்கிறது.
ALSO READ : உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமா? அப்போ இந்த பாலை அருந்துங்கள்!
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment