நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க... வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க...

 நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.


முருங்கைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைவாக இருப்பதால் வாரம் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது. அந்த வகையில் நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - 1 கப்

சின்ன வெங்காயம் - 15

தேங்காய் எண்ணெய் - 1 tsp

தேங்காய் - 3 tsp

உப்பு - தே.அ

கடுகு - 1/2 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

காய்ந்த மிளகாய் - 3


செய்முறை :

முதலில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டுங்கள்.

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தட்டுப்போட்டு மூடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து வெந்ததும் வறுத்த தேங்காயை தூவி பிரட்டுங்கள்.

அவ்வளவுதான் முருங்கைக்கீரை பொரியல் தயார்.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!