நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Jog Falls: இது இந்தியாவின் நயாகரா; மனம் மயக்கும் அருவியின் வைரல் வீடியோ......

 India's Niagara: பேரருவியின் அழகைக் காண நயாகரா செல்ல வேண்டியதில்லை. இந்தியாவிலேயே அதே போன்ற அழகான காட்சிகளை நீங்கள் காணலாம்.


  • மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சிகள் பார்க்க சிறந்தவை.
  • பேரருவியின் அழகைக் காண நயாகரா செல்ல வேண்டியதில்லை.
  • கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி கண்கவர் காட்சியளிக்கிறது.
நீர் அருவியாக பிரவாகமாக கொட்டும் காட்சியைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். நீர் வீழ்ச்சிகளை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அருவியை கீழிருந்து பார்த்தால் நீர் எங்கிருந்து விழுகிறது என்று தெரியாமல் இருக்கும் போது அந்த நீர் வீழ்ச்சிகளை ஆகாய கங்கை என்று சொல்வார்கள். அப்படிப்பட ஒரு நீர் வீச்சி தான் நயாகரா. நயாகரா அருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள பிரபலமான பேரருவி. கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றில் அமைந்துள்ளது. பனிக்காலத்தில் இந்த அருவியும் நதியும் முழுவதுமாக உறைந்து விடும். 

ஆனால், பேரருவியின் அழகைக் காண நயாகரா செல்ல வேண்டியதில்லை. இந்தியாவிலேயே அதே போன்ற அழகான காட்சிகளை நீங்கள் காணலாம். கர்நாடகாவில் உள்ள ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியின் பேரழகை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிரப்படுள்ளது. "இது நயாகரா நீர்வீழ்ச்சி அல்ல... இது இந்தியாவின் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ, கிளிப் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 85 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த அழகிய காட்சி ஆன்லைனில் ஆயிரக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது, இந்த இடத்திற்கு பயணிக்க ஒன்றே திட்டமிட வேண்டியது தான் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளன.

குறிப்பாக மழைக்காலத்தில், கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி கண்கவர் காட்சியளிக்கிறது. மழைப்பொழிவின் அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து, ஆர்பரித்து வரும் அருவி, உங்கள் மனதை மயக்கி விடும். மழைக்காலங்களில் நீர்வீழ்ச்சிகள் பார்க்க சிறந்தவை. பிரமாண்டமான ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை அனுபவிக்க சில நொடிகள் அங்கு தொலைவில் செல்ல வேண்டும். 

வைரல் வீடியோவை கீழே காணலாம்:


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!