நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள் பே-வில் UPI ஐடியை மாற்றுவது எப்படி?

 Google Pay செயலியில்  UPI ஐடியை மாற்றுவது மிகவும் எளிதானது  .....


  • கூகுள் பே செயலியின் டிப்ஸ்
  • எளிமையாக யுபிஐ ஐடியை மாற்றலாம்
  • யுபிஐ ஐடியை மாற்ற வழிமுறை

UPI வருகைக்குப் பிறகு, நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியுள்ள இந்த பணப்பரிவர்த்தனை முறை மக்களிடமும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ ஐடியின் ஸ்பெஷலே நாட்டில் உள்ள சாதாரண மக்கள் கூட UPI ஐடியை பயன்படுத்த முடியும். 

இந்தியாவில் யுபிஐ ஐடியின் பணப்பரிவர்த்தனையின் வெற்றிக்குப் பிறகு பல நாடுகளும் UPI முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இன்று, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் Google Pay, PhonePe, Paytm போன்ற UPI ஐடிகள் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். கூகுள் பே மற்றும் போன் பே என எந்தவொரு செயலியை பணப்பரிவர்த்தனைக்காக நீங்கள் பயன்படுத்தினாலும், யுபிஐ ஐடி மூலம் எளிமையாக பணப்பரிமாற்றம் செய்யலாம். 

கூகுள் பே-வில் இருப்பவர்கள், போன் பேவில் செலுத்த முடியாது என்பதெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும், எந்த செயலி யுபிஐ ஐடிக்கும் பணம் அனுப்பலாம். அதேபோல், கூகுள் பேவில் இப்போது இருக்கும் உங்களின் யுபிஐ ஐடியை நீங்கள் மாற்ற விரும்பினால், அதனைக் கூட எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள். எளிமையாக யுபிஐ ஐடியை மாற்றிவிடலாம்.  

UPI ஐடியை மாற்ற, முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Google Pay ஆப்ஸைத் திறக்க வேண்டும். அடுத்து உங்கள் புரொபைல் பகுதிக்குச் செல்லவும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்பட்சத்தில், அதில் நீங்கள் UPI ஐடியை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நீங்கள் செய்தவுடன் உங்கள் கணக்கு விவரங்கள் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

அடுத்ததாக Manage UPI IDs ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் விரும்பும் யுபிஐ ஐடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருசில விநாடிகளில் உங்களின் யுபிஐ ஐடி மாற்றப்பட்டுவிடும். இந்த எளிமையான செயல்முறை மூலம் எந்த வங்கிக் கணக்கின் யுபிஐ ஐடியையும் கூகுள் பே கணக்கில் மாற்றிவிடலாம்.   




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!