நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தலையை கழட்டி வைக்க தோன்றும் அளவுக்கு தலைவலியா? உடனடி தீர்வுக்கு எளிய வைத்தியம்.....

 சிலருக்கு அடிக்கடி தலைவலி அல்லது தலையிடி ஏற்படும். அப்படியே தலையை கழட்டி வைப்பது போன்று தோன்றும். தலைவலி அவர்களை எளிதில் பலவீனமடையச் செய்து விடும்.

தலைவலிக்கு உடனடியாக பலன் கொடுக்கும் சில எளிய வைத்திய முறைகளை காண்போம்.

சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும். இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும். சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம்.

பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து விடைபெறலாம்.

கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும்.

தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிடவும்.

காலையில் தலைவலியால் அவதிப்பட்டால் ஆப்பிள் துண்டுகளை உப்புடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும், இது தலைவலிக்கு சிறந்த மருந்து.

தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. 



ALSO READ : இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்...........


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!