நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பியானோ வாசிக்கும் குதிரை - அதிசயிக்க வைக்கும் வீடியோ!

படைப்பாற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல, விலங்குகள் மற்றும் பறவைகள் கூட படைப்பாற்றல் கொண்டது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும்.

இணையதளத்தில் தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான வீடியோக்கள் பலவற்றை பேஸ்புக், வாட்ஸ்அப், ரீல்ஸ்  போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. சில சமயங்களில் சில வீடியோக்கள் கவலைகளை எல்லாம் மறந்து நம்மை சிரிக்க வைக்கும்.

அதேசமயம் சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டும் தான் நெட்டிசன்களிடையே வைரலாகிறது. இதுபோன்ற வீடியோக்கள் நம்மை மிகவும் பிரகாசமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்டதாகவும் மாற்றுகின்றன.

மேலும் இந்த மாதிரியான க்யூட்டான வீடியோக்கள் ஒருவரின் மனநிலையையே மாற்றுகின்றன. இதனால் மனநல ஆரோக்கியத்திற்கும் இவை வழி வகுக்கின்றன என்பதையே ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. அந்த வகையில் பலராலும் பரவலாக பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோ ஒன்றில், குதிரை ஒன்றின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

படைப்பாற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல, விலங்குகள் மற்றும் பறவைகள் கூட படைப்பாற்றல் கொண்டதுதான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும். இந்த வீடியோவில், குதிரை ஒன்று பியானோ வாசிப்பதை காணலாம்.

அதில் குதிரை தனது மூக்கினால், பியானோவை இசைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எலெக்ட்ரானிக் கீபோர்டில் பியானோவை, வாய் மற்றும் மூக்கைப் பயன்படுத்தி வாசித்து இந்த குதிரை தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்கள் வாசிப்பது போன்ற இசையை குதிரை இசைப்பது வீடியோவில் நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது.

"அற்புதமான குதிரை" என்ற தலைப்புடன் Creature Nature என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இந்த குதிரைக்கு தகுந்த பயிற்சி அளித்தால் இதை வைத்து ஒரு live concert நடத்தலாம் என யோசனை கூறி உள்ளார்.

இந்த குதிரையின் உரிமையாளர் கொடுத்து வைத்தவர் என்றும் இதுபோன்ற ஒரு குதிரையை விலைக்கு வாங்கி வீட்டில் வளர்க்க தனக்கு ஆசை என்றும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ மனிதர்கள் மட்டுமல்ல ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் கூட திறமைசாலிகள் தான் என்பதையே இது போன்ற வீடியோக்கள் நமக்கு உணர்த்துகின்றன.


ALSO READ : வாழ்க்கையை முழுமையாக வாழ 20 வயதில் செய்ய வேண்டியவை


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!