நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அட எல்லா வருசமும் ஒரே டிசைன் தான்; புதுசா என்ன தான் இருக்கு? ஐபோன் 13ஐ வறுத்த நெட்டிசன்கள்

 விலை என்னவா இருக்கும்? ஒரு கிட்னிய மட்டும் வித்தா போதுமா இல்ல இரண்டையுமே அடமானம் வைக்கணுமா போன்ற கேள்விகளுக்கு மத்தியில் செவ்வாய்க் கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13-ஐ அறிமுகம் செய்தார் டிம் குக்.

ஒரு வேளை இது வருமோ? இல்ல அந்த ஃபீச்சர் இல்லாம போய்ருமோ? விலை என்னவா இருக்கும்? ஒரு கிட்னிய மட்டும் வித்தா போதுமா இல்ல இரண்டையுமே அடமானம் வைக்கணுமா போன்ற கேள்விகளுக்கு மத்தியில் செவ்வாய்க் கிழமை அன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13-ஐ அறிமுகம் செய்தார் டிம் குக்.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்வில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்கள், புதிய ஐபேட் மினி மற்றும் பல கேட்ஜெட்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அனைத்தும் அப்கிரேட் வகையறாக்களாகவே இருந்த நிலையில், புதிய பெரிய அப்டேட்கள் ஏதும் இடம் பெறாமல் போனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஐபோன் குறித்து அறிவிப்புகள் வெளியானதும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காணாத வாடிக்கையாளர்கள் மீம்களால் ஐபோன் 13-ஐ வறுத்தெடுத்துவிட்டனர்.



ALSO READ : இனி நாமளும் விண்வெளி சுற்றுலா போகலாம்: முன்னோடியானது SpaceX


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!