தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நாசிக்கில் தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை - வைரல் புகைப்படம்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தங்க மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம் எனவும் கூறியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் புதுவிதமான ஸ்வீட்ஸ்கள் விற்பனைக்கு வரும். அதில் சில வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவாரஸ்யமான ஸ்வீட் தான் நாசிக் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாசிக் நகரில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையில் விநாயகப் பெருமானின் விருப்பமான ஸ்வீட் வகையான மோதகத்தை ஒரு கிலோவுக்கு 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அப்படி இதில் என ஸ்பெஷல் என கேள்வி எழுகிறதா? இந்த மோதகத்தில் சாப்பிடக்கூடிய தங்கம் சேர்க்கப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு 21 மோதகங்கள் படைத்தது வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது இந்த ஸ்வீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கடை உரிமையாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சாகர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் தீபக் சவுத்ரி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 25 வகையான ஸ்வீட்ஸ்களை தங்கள் கடையில் தயார் செய்து விற்பனை செய்தததாகவும், அதில் இந்த தங்க மோதகம் மட்டுமின்றி, வெள்ளியால் செய்யப்பட்ட மோதகமும் அடங்கும் என கூறியுள்ளார். மேலும் தங்க மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னதாக சூரத்தில் விலை உயர்ந்த ஸ்வீட் தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் ரூ.9,000 என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளாதாக வீடியோ வெளியானது.
வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்பட்டுள்ளது. 22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும், இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனிடையே , ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ லட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ .18.90 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் யாதவ், தெலுங்கானா தொழிலதிபர் மர்ரி ஷஷன் ரெட்டி இணைந்து இந்த பிரபலமான லட்டை வாங்கியுள்ளனர். இந்த ஏலத்தில் லட்டின் ஆரம்ப விலையானது ரூ.1,116க்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதில் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் பலரும் கோடைக்காலங்களில் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. எ ண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்குவது நல்லது. அதற்கு அரிசி மா பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்ல தீர்வினை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்த...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
Comments
Post a Comment