நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பள்ளி செல்ல பாய்ந்தோடும் ஆட்டுக்குட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

 சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்லும் வழியில் அவரோடு சேர்ந்து அவர் வீட்டு ஆட்டுக்குட்டியும் ஆனந்தமாய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இந்த வீடியோவை பாராட்டி வருகின்றனர்.


வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பர் கூட இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான விஷயம். அவர்கள் உண்மையில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் சிறந்த நண்பர்களாகக் கருதுகிறார்கள். மனிதர்களிடம் மட்டுமே நட்பு, பாசம் உள்ளது என்பது கிடையாது. அனைத்து உயிர்களுக்கும் அன்பு தேவை.

நாம் நமது அன்பினை செல்லப்பிராணிகளிடமும் எதிர்பார்க்கலாம். தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு பெண் தனது ஆடுடன் பள்ளிக்குச் செல்கிறாள். இந்த வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் பேரானந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் வைரலாகும் குறுகிய கிளிப்பில், சிறுமி ஒருவர் ஒரு அழகிய மலைப் பகுதியில் சந்து வழிகளில் சுற்றி பள்ளிக்கு செல்வது போல் உள்ளது. அவள் பள்ளி சீருடை அணிந்திருந்தாள் மற்றும் தனது கூந்தலை பள்ளிக்கு செல்லும் நோக்கில் அழகாக கட்டியிருந்தாள். வீடியோவில் இணையவாசிகளை மகிழ்வுற வைத்துள்ளது ஆடு தான். "பள்ளிக்குச் செல்லும் இரண்டு நண்பர்கள்," என விடீயோவின் தலைப்பில் பதிவிட்டுள்ளனர்.














Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!