நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் தாமரை கட்டிடம்

 தாமரை கட்டிடம் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தாமரை கோவில்தான். இது பஹாய் சமயத்தின் புனிதத் தலம்.


இது 1986-ல் கட்டி முடிக்கப்பட்டது. ஈரானை சேர்ந்த கட்டிட கலைஞர் பாரிபோர்ஸ் சாபா என்பவர் இதை வடிவமைத்தார். இந்த கட்டிடம் நுட்பமான வடிவமைப்புக்காக உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. இதே போல சீனாவில் வுஜின் நகரத்தில் 2013-ல் ஒரு தாமரைக் கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. மொட்டு அவிழாத தாமரைபோல் ஒரு கட்டிடம். அதற்கு அடுத்த நிலையில் ஒரு கட்டிடம். முழு மலர்ச்சியுடன் ஒரு கட்டிடம்.

செயற்கை ஏரியின் நடுவில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடத்தின் வெளிச்சம் ஏரியில் பிரபலிக்கும்போது ஒரு பிரம்மாண்டமான இரவு மலராக வசீகரிக்கிறது.

வுஜின் நகர திட்டமைப்பு துறைக்காக இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டுடியோ 505 என்னும் அமைப்பு இந்தக் கட்டிடத்தை உருவாக்கி உள்ளது. இதன் உள்ளே கண்காட்சி வளாகம், அரங்கம், கலந்தாய்வு மையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. இது மட்டுமல்லாது வீடுகளும் உள்ளன. இந்தக் கட்டிடத்தின் வெளிப்பரப்பில் இதழ்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த இதழ்களில் தாமரை நிறத்திலான விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கட்டிடம் சீனாவின் ஒரு சுற்றுலா மையமாகவும் இப்போது மாறி இருக்கிறது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!