நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எப்பவும் கல்யாண பொண்ணு தான் டான்ஸ் ஆடணுமா? இது ஒரு சேஞ்சுக்கு!

 சும்மாவே ஆடுவாரு; அவரோட திருமணம்னா சொல்லவா வேணும் என்ற ரேச்ஞ்சுக்கு ஒரு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார் நடன கலைஞர் குஸ்தவோ துர்சோ அலெக்ஸோ.


தங்களின் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடும் ஜோடிகள் மறக்காமல் அதில் நடனத்தையும் இணைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான இந்திய திருமணங்களில் மணப் பெண்கள் மட்டுமே நடனமாடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் நடைபெற்ற ப்ரொஃபெஷ்னல் டான்சரின் திருமண நிகழ்வு வேறு லெவலுக்கு இருந்துள்ளது. சும்மாவே ஆடுவாரு; அவரோட திருமணம்னா சொல்லவா வேணும் என்ற ரேச்ஞ்சுக்கு ஒரு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார் நடன கலைஞர் குஸ்தவோ துர்சோ அலெக்ஸோ.

நான்கு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட குஸ்தோவின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய திருமணத்திற்கு சிறப்பான நடன வருகை புரிந்த மணமகனுடன், சிறிது நேரத்தில் அவருடைய நண்பர்களும் இணைந்து நேர்த்தியான நடனத்தை ஆடினார்கள்.

குட் நியூஸ் மூவ்மெண்ட் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட கிட்டத்தட்ட 2 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இது செம்ம ஸ்டைலாக நேரத்தியாக இருக்கிறது என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். 


ALSO READ : திக் திக் 45 நிமிடங்கள்! மீண்டும் உயிருடன் வந்த பெண்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!