நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவில் 3-வது தவணை தடுப்பூசி .. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட பரிந்துரை

 இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 8 மாதங்களை நிறைவடைந்த மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனை அடுத்த வாரத்தில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தலாம் என்று உணவு மற்றும் மருந்து அமைப்புக்கு வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

சுமார் 33 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் இதுவரை 38 கோடியே 40 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில், 18 கோடியே 10 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 8 மாதங்களை நிறைவடைந்த மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனை அடுத்த வாரத்தில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தாங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணையாக போட அனுமதிக்குமாறு பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் வல்லுநர் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, அனைருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்துக்கு வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பான தரவுகள் போதுமான அளவில் இல்லை என்றும், இது இளம் வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.

எனினும், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக 18 வல்லுநர்களும் வாக்களித்தனர். இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆலோசனை நடத்த உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்புக்கு மற்றொரு குழுவும் பரிந்துரைகளை வழங்க உள்ளது.

இதனடிப்படையில், அனைத்து வயதினருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடலாமா அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் போடலாமா என்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்பட உள்ளது.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!