நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒர்க்அவுட் முடித்த பின் ஒரு போதும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள் : விளைவுகள் மோசமாகலாம்..!

 சமீப நாட்களாக நீரிழப்பால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு காரணம் சரியான நேரத்தில் போதுமான தண்ணீரை குடிக்காமல் விடுவதுதான்.

நீங்கள் ஒர்க்அவுட் செய்வதை முடித்துவிட்டால் அந்த பயிற்சியானது முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. உடல் அந்த கடுமையான பயிற்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அந்த சமயத்தில் சில விஷயங்களை செய்வது தவறான செயல் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.
தண்ணீர் குடிக்காமல் விடுவது : சமீப நாட்களாக நீரிழப்பால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு காரணம் சரியான நேரத்தில் போதுமான தண்ணீரை குடிக்காமல் விடுவதுதான். அந்த வகையில் உடலின் ஒரு கிலோ எடைக்கு 30-35ml தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு மணி நேர கடுமையான உடல் உழைப்பிற்கும் 500-1000 ml தண்ணீர் குடிக்க வேண்டுமாம். அப்படி இருக்கும்போது நீங்கள் வியர்வை மூலம் தண்ணீரை வெளியேற்றுவதால் உடற்பயிற்சிக்குப் பின் உடலின் நீரிழப்பை ஈடு செய்ய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஓய்வு எடுப்பதில்லை : ஒவ்வொரு பயிற்சிக்குப் பின்னும் ஒரு ஓய்வு அவசியம். அந்த வகையில் பயிற்சி முடித்த பின்பு தசைகள் தளர்வடைந்து அதன் இயல்பு நிலைக்கு திரும்ப கட்டாயம் நீங்கள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். அதேபோல் கடுமையான பயிற்சிக்குப் பின் அப்படியே உடனே அமர்ந்துவிடக் கூடாது. சில ஸ்ட்ரெட்சஸுகள் செய்து மெதுவாக உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதிக புரோட்டீன் சாப்பிடுதல் : நீங்கள் எவ்வளவு நிமிடங்கள் அல்லது நேரங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை விட உணவில் எந்த அளவு கவனம் செலுத்துகிறீர்கள் என்பது முக்கியம். எனவே உடற்பயிற்சிக்குப் பின் கொழுப்பு நிறைந்த உணவு, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அதுவும் உடற்பயிற்சிக்குப் பின் உடனே சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் செரிமான மண்டலம் மெதுவாகவே வேலை செய்யும். எனவே அதை தொந்தரவு செய்யும் வகையில் ஹெவியாக சாப்பிட வேண்டாம்.

உடற்பயிற்சி செய்வதை கணக்கெடுக்காதீர்கள் : உங்கள் இலக்கு அன்றைய நாள் எவ்வளவு கலோரிகளை எரித்தீர்கள், எவ்வளவு கொழுப்பை கரைத்தீர்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் எடையை இழத்தல் பயணத்தில் வெற்றி காண முடியும். எனவே அதிக நேரம் பயிற்சி செய்துவிட்டேன், அதிக கவுண்ட்ஸ் எடுத்தேன் என உடனே ஓய்வு நிலைக்கு செல்லாதீர்கள். கலோரி குறைவதை நீங்கள் உணரும்போதுதான் இன்னும் வேகமாக குறைக்க வேண்டும் என்கிற ஊக்கம் , உற்சாகம் கிடைக்கும்.

ஒர்க் அவுட் ஆடையை மாற்றாமல் விடுதல் : உடற்பயிற்சி முடித்த பிறகு ஒர்க் அவுட் செய்த ஆடையை உடனே மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் வியர்வை என்னும் நச்சுநீரானது தொற்றை உண்டாக்கலாம். குறிப்பாக பருக்கள், சருமச் சேதத்தை உண்டாக்கும். அந்த ஈரமான ஆடை உங்களுக்கு சளியை கூட உருவாக்கலாம். எனவே உடனே குளித்துவிட்டு ஆடையை மாற்று ரெஃப்ரஷ் ஆகுங்கள்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!